கலைஞரே :
சாக்ரடீசின் பகுத்தறிவை படித்ததில்லை !
ப்ளேட்டோவின் தத்துவங்கள் ஞாபகமில்லை !
பெரியாரின் குறளை கேட்டதில்லை !
அண்ணாவை நேரில் பார்த்ததில்லை !
இவ்வனைவரையும் காண்கிறோம் உன் பேச்சிலே !!
இவ்வாறு கிளிஜோசியன் போல் உன்னை
நான் புகழ்வது பகுத்தறிவில்லை !!!
உன் புகழ் நான் சொல்லி தெரிவதில்லை !
நீ உதிர்த்த சொல்லை திரும்ப பெற்றதில்லை !
அதற்காக எவரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை !
" என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே "
என்ற உன் சொல்லில் சிலிர்க்காத உடல்கலில்லை !
ராமன் கட்டிய ? பாலத்தை நம்புபவர்கள்
நீ கட்டிய பாலத்தின் மீது போகிறார்கள் !
நீ தந்த சமத்துவபுரத்தில் குடியேறியவர்கள்
உன்னை கோட்டையை விட்டு வெளியேற்றினார்கள் !
காப்பீட்டுதிட்டதில் உயிர் பிழைத்தவன் கூட
உன்னை கட்டையில் போக சொல்கின்றான் !
நீ கட்டுமரமாக மிதந்தாலும் !
அதிலேயே அவர்கள் பயணம் செய்தாலும் !
உனக்கு செவ்வாய் கிரகத்திலும் சொத்து
இருப்பதாக பேசிக்கொண்டு வானத்தை நோக்கி
செவ்வாயை தேடி வாயை பிளக்கின்றான்!
ஓய்வறியா சூரியனுக்கு
ஓய்வு கொடுத்த மக்களுக்கு
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு !
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு !