கலைஞரே :
சாக்ரடீசின் பகுத்தறிவை படித்ததில்லை !
ப்ளேட்டோவின் தத்துவங்கள் ஞாபகமில்லை !
பெரியாரின் குறளை கேட்டதில்லை !
அண்ணாவை நேரில் பார்த்ததில்லை !
இவ்வனைவரையும் காண்கிறோம் உன் பேச்சிலே !!
இவ்வாறு கிளிஜோசியன் போல் உன்னை
நான் புகழ்வது பகுத்தறிவில்லை !!!
உன் புகழ் நான் சொல்லி தெரிவதில்லை !
நீ உதிர்த்த சொல்லை திரும்ப பெற்றதில்லை !
அதற்காக எவரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை !
" என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே "
என்ற உன் சொல்லில் சிலிர்க்காத உடல்கலில்லை !
ராமன் கட்டிய ? பாலத்தை நம்புபவர்கள்
நீ கட்டிய பாலத்தின் மீது போகிறார்கள் !
நீ தந்த சமத்துவபுரத்தில் குடியேறியவர்கள்
உன்னை கோட்டையை விட்டு வெளியேற்றினார்கள் !
காப்பீட்டுதிட்டதில் உயிர் பிழைத்தவன் கூட
உன்னை கட்டையில் போக சொல்கின்றான் !
நீ கட்டுமரமாக மிதந்தாலும் !
அதிலேயே அவர்கள் பயணம் செய்தாலும் !
உனக்கு செவ்வாய் கிரகத்திலும் சொத்து
இருப்பதாக பேசிக்கொண்டு வானத்தை நோக்கி
செவ்வாயை தேடி வாயை பிளக்கின்றான்!
ஓய்வறியா சூரியனுக்கு
ஓய்வு கொடுத்த மக்களுக்கு
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு !
நன்றி சொல்ல வார்த்தை இல்லை எங்களுக்கு !
மிக்க நன்று. உடனே தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைக்கவும். சந்தேகம் எதும் இருப்பின் எனக்கு மெயில் செய்யவும். உங்கள வலைப்பூ வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான பதிவு. கலைஞரை குறை சொல்லுபவர்களுக்கு அவர் செய்யும் வளர்ச்சி பணிகள் ஏதும் தெரியவில்லை. பணம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது . உலகத்தில் கலைஞர் மட்டும் தான் தவறு செய்கிறார். மற்றவர்கள் எல்லோரும் அர்ச்சந்திரனுக்கு உடன் பிறந்தவர்கள் போல பேசுகிறார்கள். அவருடைய தகுதிக்கும் , திறமைக்கும் , உழைப்புக்கும் அவருக்கு மிகை யாரும் இல்லை.
ReplyDeleteவாழ்த்துகள் உடன்பிறப்பே
ReplyDeleteவேர்டு வெரிபிகேஷன் எடுத்துவிடவும். அது உங்களுக்கு பின்னூட்டம் போட நினைப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும். அது போல கமெண்ட் மாடரேஷன் வைக்கவும். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே பின்னூட்டம் வெளிவர வேண்டும். ஏனனில் சில வக்கிரக்காரர்கள் இந்த இடத்திலும் வந்து தலைவரை திட்டும் அபாயம் உள்ளது தோழர்!
ReplyDeleteஅருமை. அருமை.சற்று எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்துங்கள். இந்த தங்களது முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓங்கி வளர்ந்த தியாக தீபத்தை மூடி அணைத்தால் அணைந்திடுமா...?
ReplyDeleteஎதையும் தாங்கும் இதயம்..., எமை காய்ந்த சருகு களைத்திடுமா...?
தலைவர் புகழ் பரப்ப வாழ்த்துகள்.
ReplyDeleteபுதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். தலைவர் கலைஞர் அவர்களை வைத்து துவக்கப்படும் அனைத்துமே அமோகமாக வளரும். இது வரலாற்று உண்மை. அவசியம் தமிழ்மணம், இண்ட்லி போன்ற திரட்டிகளில் பதிய வையுங்கள்.
ReplyDeleteநல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே....
ReplyDeleteஅருமையான கவிதை அசோக். சங்கத்தமிழ் கண்ட மதுரையின் மைந்தன் என்பதை உறுதி செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்... எல்லாப் புகழும் தலைவருக்கே...
ReplyDeleteகாலமெல்லாம் கலைஞரின் வழியில்.
இராம. வைரமுத்து
http://dmkthondan.blogspot.com
Ashok Sir!!!Adutha Murai Thalaiver Engal Ooruku Varum Bothu Cutout til vaika ungal kavithai varigal silavatrai eduthu kolgiren...Royalty keetka mattergal endra nambikai odu
ReplyDeleteGood One
ReplyDeletearumaiyana Padaippu... Ungalin muyarchi menmelum vetripera en vazhththukkal
ReplyDelete